அதிபர் பைடனை தொடர்ந்து உக்ரேனுக்கு சென்ற முக்கிய நாட்டின் பிரதமர்!
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உக்ரேனுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலென்ஸ்கியுடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக என பிரதமர் மெலோனியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் இத்தாலிய பிரதமராக பதவியேற்ற ஜியோர்ஜியா மெலோனி, தனது நாட்டின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உக்ரேனுக்கு விஜயம் செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார்.
நேட்டோ நாடான இத்தாலி, உக்ரேனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. தரையிலிருந்து மேலும் வானுக்கு ஏவக்கூடிய நடமாடும் ஏவுகணைகளை உக்ரேனுக்கு அனுப்புவதற்கும் இம்மாத முற்பகுதியில் இத்தாலி சம்மதித்திருந்தது.
நேற்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு எந்த ஒரு அறிவிப்புமின்றி சென்றுள்ளார்.