பிரான்ஸில் அடுத்த மாதம் மக்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!
பிரான்ஸில் அடுத்த மாதம் முதல் இரண்டு மணி நேர மின்வெட்டு சாத்தியத்தை அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் தற்காலிக திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் பிராந்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அரசாங்க சுற்றறிக்கைக்கமைய காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை வரை, உச்ச மின்சார நுகர்வின் போது மின் தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
மின்வெட்டு ஏற்பட்டால், சில ரயில் மற்றும் டிராப்களின் பயண சுழற்சிகள் சீர்குலைக்கப்படலாம். ஆனால் மின் தடையின் போது பயணிகள் வண்டிகளில், லிப்ட்களில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இதன்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ரயிலில் பயணிகள் சிக்கித் தவிக்கும் தீவிரமான சூழ்நிலையில் மக்களை ஆபத்தான நிலையில் விட்டுச் செல்லாமல் இருக்க மின் தடை குறித்து முன்கூட்டியே அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.