மகாராணியின் இறுதி ஊர்வலம்; லண்டனில் விமானங்கள் பறப்பதற்கு தடை!
இரண்டாம் எலிசபெத்(Queen Elizabeth II) மகாராணியின் சவப் பேழை ஊர்வலத்திற்காக லண்டனுக்கு மேலே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக ஹீத்ரோ விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இறுதி ஊர்வலம் நடைபெறுவதால் நிசப்தத்தை உறுதிப்படுத்த பல விமானங்கள் தடைபடும் என்று லண்டனின் மிகப்பெரிய விமான நிலையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ராணியின் சவப்பேழை பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுவதால், விமானங்கள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலைய நடவடிக்கையில் மேலும் மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன, வரும் நாட்களில் இன்னும் விரிவாக அவர்களைத் தொடர்பு கொள்வோம் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது.
வரவிருக்கும் நிகழ்வுகளில் தாக்கத்தை குறைக்க நாங்கள் வேலை செய்வதால், இந்த மாற்றங்கள் ஏற்படுத்திய இடையூறுகளுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிலையில் புதன்கிழமை வரவிருந்த எட்டு ஐரோப்பிய விமானங்களை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் உறுதிப்படுத்தியது.
செப்டம்பர் 9-19 க்கு இடையில் 2,500 அடிக்கு (760 மீட்டர்) கீழே பறக்கும் ஆளில்லா விமானங்கள் உட்பட விமானங்களை தடைசெய்து, மத்திய லண்டனில் வான்வெளி கட்டுப்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து ஆணைய ஒழுங்குமுறை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.