ரஷ்ய அரசு தான் உண்மையான ஹிட்லர்!
ரஷ்ய அரசு தான் உண்மையான ஹிட்லர் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 20 நாள்களைக் கடந்து போரிட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷ்யா, தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இன்று உக்ரைனின் மரியுபோல் பகுதியில் உள்ள திரையரங்கத்தை தாக்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அரசுதான் இப்போதைய உண்மையான ஹிட்லர் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் (Olekshi Resnikov) தெரிவித்துள்ளார்.
மேலும், 'ரஷ்ய அதிபர் புடின் உண்மையான போர் குற்றவாளியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ரஷ்ய துருப்புக்கள் மரியுபோலில் உக்ரேனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்கின்றன, உக்ரைனை முழுவதுமாக அழிப்பதே ரஷ்யாவின் குறிக்கோளாக உள்ளது' என்று தெரிவித்தார்.