உரையாற்றிக்கொண்டிருக்கையில் திடீரென உயிரிழந்த தூதர்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் (Video)
எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani) திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 8ஆம் திகதியான திங்களன்று எகிப்தில் வைத்து நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின்(Abdel Fattah al-Sisi) சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டு இருந்த போது திடிரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani)உயிரிழந்துள்ளார்.
இந்த உரையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை (Abdel Fattah al-Sisi) மனிதகுலத்தின் டீன் மற்றும் அமைதியான மனிதர் என அல்-கஹ்தானி விவரித்து இருந்தார்.
#Saudi diplomat Mohammad Fahad al-Qahtani died suddenly while speaking at the Arab-African conference in #Egypt. pic.twitter.com/Qk3VL1JD0F
— NEXTA (@nexta_tv) August 10, 2022
அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani) தனது மனைவி ஆயிஷா அல்-ஜாப்ரியுடன்(Aisha Al-Jabri) மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.