லண்டன் கேட்வே துறைமுகத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
லண்டன் கேட்வே துறைமுகத்தில் அரை டன்னுக்கும் அதிகமான கோகோயின் போதைப்பொருளைக் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேசிய குற்றவியல் பிரிவு அதிகாரிகள் எல்லைப் படையுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு படகு மூலம் அனுப்பப்பட்ட வாழைப்பழத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் நெதர்லாந்திற்கு அனுப்பப்பட்ட திட்டமிட்டிருந்ததாக தேசிய குற்றவியல் பிரிவு புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்ஃ எப்படியிருப்பினும் கடந்த 26ஆம் திகதி இந்த போதைப்பொருள் இடைமறித்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் 40 மில்லியன் பவுண்ட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களினால் இவ்வாறான போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.