ரஷ்ய தாக்குதலில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றிய வீரர்கள்!
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், சேதமடைந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கீவ்வின் வடமேற்கே உள்ள போரோடியங்காவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, அந்த பூனைக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
Remember the survivor cat from #Borodianka? I was sent a happy sequel to his story! He now lives in the Ministry of Internal affairs, fed, bathed, and loved. He will participate in all important meetings, of course.#UkraineUnderAttack #StandWithUkraine pic.twitter.com/yvQYy6QljC
— Anton Gerashchenko (@Gerashchenko_en) April 9, 2022
