கூலிப்படையினரிடம் வீழ்ந்தது ரஸ்யாவின் தென்பகுதி நகரம்!
ரஸ்யாவின் தென்பகுதி நகரமான ரொஸ்டொவ் ஒன் டொன் நகர் வாக்னர் கூலிப்படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு அங்குள்ள , இராணுவதலைமையகத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் அந்த நகரின் இராணுவதலைமையகத்திற்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நான் இராணுவதலைமையகத்திற்குள் இருக்கின்றேன் இராணுவத்தின் கட்டிடங்கள் எங்கள் வசம் வந்துள்ளன எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர், ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள் முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறி கலகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.