சிங்கப்பூர் குறித்து நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை
சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாகி பரவி வருவதனால் விரைவில் பாதிப்பு உச்சத்தை தொடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதனை பற்றி அவர் கூறியதாவது , “சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஆனாலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளை விட சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் மெதுவாகவே இருக்கும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.