மும்பை அணியை மிரட்டிய இளம் வீரர் ரஜினியின் ரசிகரா? சுவாரஸ்ய கதை

  ‘வெங்கடேஷ் ஐயர்’ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இப்போது அவரின் ஆட்டத்தை பார்த்து மயங்கிக் கிடக்கிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. ஐபிஎல் களத்தில் அவர் விளையாடியது இரண்டே ஆட்டங்கள் தான். அதுவும் நடப்பு சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் தான் அவரது அறிமுகமே அமைந்துள்ளது.

அவரது வருகை கொல்கத்தா அணியில் புதிய பாய்ச்சலை கொடுத்துள்ளது. இரண்டே ஆட்டங்களில் 94 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அது தான் இப்போது எல்லோர் மத்தியிலும் அவர் குறித்த பேச்சை எகிற செய்துள்ளது.

உள்ளூர் ஊடகம் தொடங்கி உலக ஊடகங்கள் வரை இப்போது அவரது ராஜ்ஜியம் தான். “அந்த பையனுக்கு பயம் இல்ல!” என பொல்லாதவன் படத்தில் வரும் செல்வம் போல வசனம் பேசி வருகின்றனர் விமர்சகர்கள், எதிரணியினர் மற்றும் ரசிகர்கள். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களின் பவுலிங் அட்டாக்கை அடித்து நொறுக்கியது அதற்கு காரணம்.

யார் இவர்? மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். 26 வயது இளைஞர். தமிழர். ரஜினிகாந்த் ரசிகர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் எப்படி கிரிக்கெட் விளையாட்டை பொழுது போக்காக விளையாடுவார்களோ அது போல தான் வெங்கடேஷ் ஐயரும் கிரிக்கெட் விளையாட தொடங்கி உள்ளார். இதற்கு பின்னால் ஒரு குட்டிக் கதையும் உள்ளது.   

எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் வெங்கடேஷ் ஐயரை, அவரது அம்மா தான் வெளியில் போய் விளையாடு என சொல்லி நிர்பந்தித்துள்ளார். அதன் பலனாக தான் வெங்கடேஷ் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

அவர் படிப்பிலும் படு கெட்டிக்காரர். அதற்கு ஒரு உதாரணம் தான் பட்டைய கணக்கர் தேர்ச்சிக்கு தேவையான Integrated Professional Competence Course தேர்வில் தேர்ச்சி பெற்றவர். MBA (பைனான்ஸ்) முடித்துள்ளார்.

வாழ்க்கையே வேறு விதமாக நகர்ந்திருக்கும். அதற்கு தகுந்த வேலையும் கிடைத்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டை அவர் தனது கரியராக மாற்றிக் கொண்டு அதில் சாதித்தும் வருகிறார். அதன் மூலம் நான் கிரிக்கெட் விளையாட்டிலும் வல்லவன் என நிரூபித்து வருகிறார்.

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர்!

வெங்கடேஷ் ஐயர் இப்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார். இடது கை பேட்ஸ்மேனான அவர், ரைட் ஆர்ம் மீடியம் ஃபேஸில் பந்து வீசுபவர். அது அவருக்கு கூடுதல் பலமும் கூட. மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் மாஸ் காட்டியவர். 2020 - 21 விஜய் ஹசாரே டிராபியில் ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 273 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதில் ஒரே ஒரு இன்னிங்ஸில் 146 பந்துகளில் 198 ஓட்டங்களை குவித்திருந்தார். அது தான் அவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணியை தூண்டுதலாக அமைந்தது. அதன் விளைவாக அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஐயரை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி.  

2020 - 21 சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரிலும் மத்திய பிரதேச அணிக்காக ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 227 ரன்களை எடுத்திருந்தார். 2015 முதல் லிஸ்ட் ஏ போட்டிகள், 2018 முதல் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருகிறார். இதுவரை 10 முதல் தர கிரிக்கெட் போட்டிகள், 24 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 38.95.

கங்குலி கொடுத்த தாக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் இந்நாள் தலைவருமான கங்குலியின் தீவிர ரசிகர் வெங்கடேஷ் ஐயர். அதை அவர் ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

“சிறுவயதில் நான் வலது கை பேட்டிங் தான் செய்து வந்தேன். கங்குலியின் ஆட்டத்தை பார்த்து நான் வியந்து போனேன். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக அவர் சுழட்டி அடிக்கும் சிக்ஸர்களுக்கு நான் அடிமை. எனது ஆட்டத்தின் மூலம் கங்குலியை பிரதிபலிக்க விரும்பினேன். 

அதனால் நான் என்னை கங்குலியாகவே நினைச்சுக்கிட்டேன். இடது கையால் பேட் செய்ய பழகினேன். கங்குலியாகவே மாறி நின்னேன்” என தெரிவித்துள்ளார்.

கங்குலி போலவே இடது கையில் பேட் செய்யும் அவர், வலது கையால் பந்து வீசுபவர். இதோடு தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா அணியுடன் தொடங்குவது மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார் வெங்கடேஷ். அதற்கு ஒரு சென்ட்டிமென்ட் காரணமும் உள்ளது. கங்குலி ஐபிஎல் களத்தில் முதன்முதலில் கொல்கத்தாவுக்கு விளையாடியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார் வெங்கடேஷ்.

ஆறாவது பேட்ஸ்மேன் டூ ஓப்பனர்!

“ஐயரின் ஆட்டத்தில் ஒரு தாக்கம் இருந்ததை நான் உணர்ந்தேன். அதனால் ஆறாவது பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவரை தொடக்க வீரராக கடந்த சீசனின் சையத் முஷ்டக் அலி தொடரில் மத்திய பிரதேச அணிக்காக களம் இறக்கினேன். அப்போது நான் அவரிடம் ஒன்று சொல்லி இருந்தேன்.

‘அடுத்த ஐந்து இன்னிங்ஸில் நீங்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை என்றாலும் அணியின் ஓப்பனர் நீங்கள் தான்’ என சொன்னேன். அந்த மாற்றம் எங்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதற்கு பின்னர் தான் அவர் அணியின் ஆஸ்தான தொடக்க வீரர் ஆனார். அவரது பேட் வீச்சு மிகவும் வேகமாக இருக்கும். அதில் வலுவும் இருக்கும்.

டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான ஆட்ட நேர்த்தி அதில் இருப்பதாக நான் பார்க்கிறேன்” என்கிறார் இந்திய அணியன் முன்னாள் விக்கெட் கீப்பரும், மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளருமான சந்திரகாந்த் பண்டிட்.

கில்கிறிஸ்ட் வகையறா!

“ஐயர், முன்னாள் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் போல ஆட்டத்தை அணுகுவதாக நான் கருதுகிறேன். அவர் விளையாடுவதை பார்க்கவே ஆர்வமாக உள்ளது. முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் தன்மை கொண்ட வீரர்” என தெரிவித்துள்ளார் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம். 

போல்ட் - பும்ராவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது எப்படி?

மும்பை அணியில் கிரிக்கெட் உலகில் அபாரமாக பந்து வீசும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான போல்ட், பும்ரா மாதிரியான வீரர்கள் இருந்தனர்.

ஆனால் அவர்களது பந்தை துவம்சம் செய்திருந்தார் வெங்கடேஷ். அது குறித்து ஆட்டத்திற்கு பிறகு அவரிடம் கேட்கப்பட்டது. “நான் விளையாடும் போது பந்து வீச்சாளர்களை பார்ப்பதில்லை. மாறாக அவர்கள் வீசுகின்ற பந்துகளை தான் பார்க்கிறேன்.

அதனால் என்னால் ஸ்கோர் செய்ய முடிகிறது. மேலும் நாங்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியதை இப்போது எக்ஸ்கியூட் செய்கிறோம். அவ்வளவு தான். மற்றபடி ஒன்றும் இல்லை” என சொல்லியுள்ளார் வெங்கடேஷ். 

கவனிக்கத்தக்க வீரரான வெங்கடேஷ்!

வெங்கடேஷ் குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது எதிரணியினரும் பேச தொடங்கி உள்ளனர். இனி கொல்கத்தா அணிக்கு எதிரான வியூகங்களை வகுக்கும் போது அந்த லிஸ்டில் வெங்கடேஷ் ஐயரும் இருப்பார். இப்போது தனது வருகையை கல்வெட்டில் பதித்தது போல ஆழப்பதித்துள்ளார். அதை அப்படியே தொடருவார் என நம்புவோம். 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு தர்மலிங்கம் குருசாமி

இருபாலை, Sarcelles, France

17 Oct, 2021

நன்றி நவிலல்

திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி

மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, திருகோணமலை, Pickering, Canada

18 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசபை சிவசுந்தரம்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020

மரண அறிவித்தல்

திருமதி சின்னையா சரஸ்வதி

நாவற்குழி கிழக்கு, Bobigny, France

12 Oct, 2021

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு அன்டனி மரியதாஸ் தோமஸ்

அச்சுவேலி, திருகோணமலை, Toronto, Canada

16 Oct, 2021

மரண அறிவித்தல்

செல்வி அனோஜா பற்றிக் செவேந்திரன்

யாழ்ப்பாணம், தெஹிவளை

16 Oct, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016

மரண அறிவித்தல்

திரு விஜிதரன் செல்வரத்தினம்

நவாலி, New Jersey, United States

14 Oct, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருணாசலம் சோமசுந்தரம்

காரைநகர் பாலக்காடு, புத்தளம்

18 Oct, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மேஸ்வரி இராஜரட்ணம்

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி நவரஞ்சிதம் நல்லையா

கரைச்சிக்குடியிருப்பு, கொழும்பு

15 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கந்ததாஸ் இரவீந்திரராசா

அராலி, கொழும்பு

15 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

அகாலமரணம்

திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை

மட்டக்களப்பு, நெளுக்குளம், Toronto, Canada

12 Oct, 2021

நன்றி நவிலல்

திரு இராசு யோகநாதன்

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021

நன்றி நவிலல்

திரு அல்பிறெட் ஜோர்ச்

அல்லைப்பிட்டி, கொழும்பு

17 Sep, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவமலர் பரம்சோதிநாதன்

ஏழாலை, நுணாவில் மேற்கு, கனடா, Canada

16 Oct, 2011

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தேவநாயகம் ஜோசபின்

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020

மரண அறிவித்தல்

திருமதி தம்பிராசா செல்லம்மா

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம்

வயாவிளான், Lewisham, United Kingdom

28 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016

1ம் ஆண்டு நினைவஞ்சலி

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் நிர்மலாதேவி ரத்தனம்

திருகோணமலை, வவுனியா

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி தர்மரட்ணம்

களுவாஞ்சிக்குடி, Gaborone, Botswana, Jakarta, Indonesia, Bangkok, Thailand, Geneva, Switzerland, சிட்னி, Australia, Prashanthi Nilayam, India, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom

11 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு சங்கரப்பிள்ளை யோகராஜா

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு யோகராஜசிங்கம் ராகுலன்

கோணாவில், Versailles, France, Neuilly-Plaisance, France

08 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி சீவரட்ணம்மா வேலுப்பிள்ளை

உரும்பிராய் கிழக்கு, Ajax, Canada

12 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு குழந்தைவேலு நவரத்தினசோதி

வல்வெட்டித்துறை, கலிஃபோர்னியா, United States

07 Oct, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு ஏகாம்பரம் செல்லப்பா

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு

மடத்துவெளி புங்குடுதீவு, Brampton, Canada

09 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி சாந்தினி சிவானந்தன்

கோண்டாவில், வவுனியா, டெல்லி, India

12 Oct, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் சண்முகநாதன்

கொக்குவில், Toronto, Canada

12 Oct, 2021

நன்றி நவிலல்

திருமதி சொர்ணாம்பாள் நல்லையா

எழுவைதீவு, திருநெல்வேலி, Mississauga, Canada

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, புளியம்பொக்கணை

12 Oct, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US