சீனாவில் திடீரென பெய்த புழு மழையால் பரபரப்பு!(Video)
சீனா தலைநகரமான பீஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் புழுக்களும் சேர்ந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.
இந்நிலையில் புழுக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குடைகளைப் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் செல்வதுடன் சாலையோரம் நிற்கவைக்கப்பட்டுள்ள கார்கள், வாகனங்களில் தண்ணீருடன் புழுக்களும் மிதக்கின்றன.
இந்த வினோத புழுக்கள் மழை குறித்து சீன அரசாங்கம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Breaking: China citizens told to find shelter after it looked like it started to rain worms.
— Antonio Sabato Jr (@AntonioSabatoJr) March 11, 2023
pic.twitter.com/oTu4t4u86v
இதற்கிடையே சீன பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோ போலியானது. ஏனெனில் பீஜிங்கில் தற்போது மழை பெய்ததாக பதிவாகவில்லை என கூறி உள்ளார்.