நீராட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்; ஒரே குடும்பத்தில் வசித்துவந்த மூவர் பிணமாக
பிரேசில் நாட்டில் ஒரே குடும்பத்தில் வசித்துவந்த 3 நபர்கள் அருவியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமான ரிவா அருவி (Riva Falls)அமைந்துள்ளது.
ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி (Andrea Michelsky) என்பவரும், அவருடைய மகளான அனா சோபியா (Ana Sophia) என்பவரும் பிரேசிலில் வசித்து வந்தார்கள். அவர்களுடன் ஆண்ட்ரியாவினுடைய சகோதரியின் கணவரான சிட் டே பவுடா (Sid de Pauda) என்பவரும் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் 4 உறவினர்களுடன் சேர்ந்து ரிவா அருவிக்கு (Riva Falls) குளிப்பதற்காக சென்றனர். அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் குளித்துக் கொண்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் ஆண்ட்ரியாவினுடைய தலைமுடி நீருக்கடியிலிருக்கும் பாறைகளில் சிக்கிக்கொண்டதில் அவர் உயிரிழந்தார்.
அத்துடன் அவரது மகளும், ஆண்ட்ரியாவினுடைய சகோதரியின் கணவரும் வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களின் சடலங்களை மீட்டனர். மேலும் மிஞ்சிய 4 நபர்களையும் போராடி மீட்புக்குழுவினர் கரை சேர்த்தனர்.