போர்க்களமாக மாறிய துருக்கி நாடாளுமன்றம்; வைரலாகும் காணொளி!
துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த விவாதத்தின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வைரலாகும் காணொளி
அப்போது எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்ட னர். அடலே சிறையில் இருந்தாலும், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் துருக்கி தொழிலாளர் கட்சியை பிரதிநித்துவப்படுத்தி வந்த நிலையில், அதன் வாயிலாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் சிறை தண்டனை குற்றவாளி என அவரின் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அடலேவின் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது.
????VIDEO:- Fists fly in #Turkishparliament, Dozens of lawmakers in #Ankara brawled during a tempestuous session of the parliament after a ruling party MP struck an opposition colleague who called the government “terrorists.”#Turkey #Fistfighting #İstanbul #Kursk #Russia pic.twitter.com/pVPSe5GBPP
— iMAQ (@manzooraq) August 16, 2024
இதனிடையே அவரை நாடாளுமன்ற அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்த மோதலின் போது இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காயமடைந்தனர்.
அதோடு, ஒரு பெண் உறுப்பினரும் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.