இங்கிலாந்து அனைத்து ரீதியாகவும் உக்ரைனுக்கு துணை நிற்கும்; போரிஸ் ஜான்சன்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.
முன்னதாக பெலாரஸ் நாட்டில் குவிக்கபட்டு இருந்த ரஷிய படைகள் கீவ் நகருக்குள் நுழைந்தன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு பயப்படமாட்டோம், இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும்.
இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இறுதியில் ராணுவ ரீதியாக இங்கிலாந்தின் நிலைப்பாடு இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதன்படி மேற்கத்திய நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த புதின் பயன்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் ரஷிய கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயு சார்ப்பு கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வர நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டும்’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.