உக்ரைனின் ஆதாரங்களை மறைக்கும் அமெரிக்கா!
உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்யாவிற்கு எதிரான விசாரணைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா உதவினால் அது ஒரு முன்னுதாரணமாக அமைந்து எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறை உட்பட ஏனைய தரப்பினர் ரஷ்யாவின் யுத்த குற்ற ஆதாரங்களை ஹேக் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கு தொடுநர் ஆரம்பித்த விசாரைணகளிற்கு அவசியமான ஆதாரங்களை அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதை பென்டகன் தடுக்கின்றது.
மேலும் உக்ரைனில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்களை வேண்டுமென்றே இலக்குவைப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டதற்கான ஆதாரங்களையும் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதை பென்டகன் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.