சொந்த செலவில் சூனியம் வைத்த ட்ரம்ப் ; கடும் சரிவை சந்தித்த டொலரின் மதிப்பு
அமெரிக்க டொலரின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.
ஸ்விஸ் பிராங்குடன் ஒப்பிடுகையில், டொலரின் மதிப்பு கடந்த 2015ம் ஆண்டு இருந்த அளவுக்கு சரிந்திருக்கிறது.
இதுவே, யுரோவுடன் ஒப்பிடுகளையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.
இந்த சரிவுக்கு காரணம் டிரம்பின் வரி அச்சுறுத்தல்தான் என்றும், அமெரிக்கா வரி விஷயத்தில் இவ்வளவு கடுமையாக நடக்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்தை சேர்ந்த Internationale Nederlanden Groep வங்கியின் மாற்று நாணய நிபுணர் பிரான்சிஸ்கோ பெசோல் இது குறித்து கூறுகையில், "இப்போது நடந்திருக்கும் டாலரின் சரிவு என்பது சாதாரணமானது கிடையாது. இது ஒரு டாலர் நெருக்கடி" என்று கூறியுள்ளார்.
அதேபோல ஜப்பானை சேர்ந்த Nomura வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "மூலதன முதலீட்டாளர்கள் அமெரிக்கா மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளனர்.