நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயது இளம்பெண் தன்னுடைய தோழிகளுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.
இதன்போது அவர் உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நாக்கை கடித்து விட்டதால் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்.
அதன் பின்னர் நாட்கள் செல்லச் செல்ல உடல் நலப் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளன. அவரது சருமத்தின் நிறம் ஊதா நிறத்தில் மாற்றமடையத் தொடங்கியதுடன் நாக்கும் கறுப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ள து.
Ludwig’s angina என்ற அரிதான நோய்
இந்நிலையில் கெய்ட்லினுக்கு ஏற்பட்டிருப்பது Ludwig’s angina என்ற அரிதான நோய் எனவும், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு செப்சிஸ் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
உடலில் உள்ள ஒக்ஸிஜன் அளவை தக்க வைப்பது, மூச்சுப் பாதையை சீரமைப்பது, உறுப்புகளின் செயலிழப்பை தடுப்பது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள இந்த கோமா நிலை கட்டாயமாகும் எனக் கூறப்படுகின்றது.
எனினும் போராட்டம் மிகுந்த இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது கெய்ட்லின் குணமடைந்துள்ளார். தனக்கு இரண்டாவதாக உயிர் கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாக்கை கடித்ததால் பெண்ணொருவ கோமாவுக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.