ரஷ்ய விமான விபத்து தொடர்பான வெளியான தகவல்
தொலைதூர கிழக்கு அமுர் பகுதியில் அதன் இலக்கிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை ரஷ்ய மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அங்காரா ஏர்லைன்ஸின் An-24 விமானம், 42 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், பிளாகோவெஷ்சென்ஸ்கில் இருந்து சீன எல்லைக்கு அருகில் புறப்பட்டு,
டின்டா விமான நிலையத்தை நெருங்கியபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு ரேடார் திரைகளில் இருந்து மறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ரஷ்ய சிவில் விமான ஹெலிகொப்டர் விமானத்தின் உடற்பகுதி எரிவதைக் கண்டதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்ததாக நம்பப்படவில்லை என்றும் அது தகவல் வெளியிட்டது.
இதனிடையே, விமானத்தில் இருந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர் என்று அமுரின் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் கூறினார்.
டின்டாவிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலைப்பாதையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமுரின் சிவில் பாதுகாப்பு மையம் தெரிவித்ததாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்று தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் அடர்ந்த வனப்பகுதியில் எரியும் விமானத்தின் சிதைபாங்களை காட்டுகின்றன.