கனடாவில் விலங்குகளை சித்திரைவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
கனடாவில் வட ஒன்றாறியோவின் நாட்ஷோர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் விலங்குகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
61 வயதான சந்தேக நபர் தொடர்பில் சுமார் ஆறு மாத கால விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு சொந்தமான இடத்தில் ஒன்பது இறந்த ஆடுகள் மீட்கப்பட்டதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக இந்த ஆடுகள் பராமரிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஆடுகளை பராமரித்து வந்த கட்டிடத்தில் ஒரு ஆடு மட்டுமே உயிருடன் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏனைய ஆடுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடுகளுக்கு தேவையான உணவு நீர் மற்றும் இருப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதனையும் இந்த நபர் நீண்ட காலமாக வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். விரைவில் இந்த நபர் நீதிமன்றின் எதிரில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.