ஜோ பைடன் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது குறுகிட்ட பெண்
அமெரிக்கா - மினெசொட்டாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றிக்கொண்டிருந்தவேளை குறுக்கிட்ட பெண்ணொருவர் காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளார்.
ஜனாதிபதி அவர்களே நீங்கள் யூதமக்கள் குறித்து அக்கறை காண்பிக்கின்றீர்கள் யூத மத தலைவர் என்ற வகையில் நீங்கள் உடனடியாக இங்கேயே யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என அந்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதிலளித்த ஜனாதிபதி
அங்கு காணப்பட்டவர்கள் அந்த பெண்ணை தொடர்ந்தும் பேசவிடமால் தடுக்க முயன்ற போதிலும் உடனடியாக அமெரிக்க ஜனாதிபதி கைதிகளை மீட்பதற்கு நாங்கள் இடைநிறுத்தம் அவசியம் என கருதுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பின்னர் விளக்கமளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் குறித்தே கருத்து தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
கேள்வி எழுப்பிய பெண்ணை பாதுகாப்பு தரப்பினர் அழைத்து சென்று வெளியேற்றியுள்ளனர்.