அச்சமடையவைத்த உலகின் பிரபல விமானநிறுவன விளம்பரம்; வைரலாகும் காணொளி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விளம்பரத்தை புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் எடுத்துள்ளது. இந்த விளம்பரம் உலகின் உயரமான இடத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் , தற்போது குறித்த காணொளி வைரலாக பரவி வருகிறது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு சொந்தமான எமிரேட்ஸ் விமான நிறுவன விமானங்கள் உலகம் முழுவதும் பறக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அண்மையில் ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில், எமிரேட்ஸ் விமானப்பணிபெண் ஊழியர் ஒருவர் யூனிபார்மில் ஒரு பெண் இருக்கிறார். அவர் கையில் சில பதாகைகளை காட்டுகிறார்.
அதில் எமிரேட்ஸில் விளம்பர வாசகங்கள் இருக்கிறது. அவர் ஏதோ உயரத்தில் இருப்பதாக தெரிகிறது. அவர் கையில் உள்ள ஒரு பாதகையில் அவர் உலகின் உயரமான இடத்தில் இருப்பதாக எழுதியிருக்கிறது. அதன் பின்னர் கேமரா பின்னே நகர்கிறது. அப்பொழுது பார்த்தால் தான் ஆச்சரியம் அந்த பெண் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் இருக்கிறார்.
இந்த உயரம் 828 மீட்டர் அதாவது கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1 கி.மீ உயரம் அங்கு நின்று கொண்டிருக்கிறார். பலர் இந்த விளம்பரத்தை பா்த்ததும் இது கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டிருக்கும், கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் என பலர் கருதியதுடன் ப இந்த விளம்பரம் குறித்து விவாதிக்க துவங்கினர்.
இந்நிலையில், எமிரேட்ஸ் நிறுவனம் இந்த வீடியோ உண்மையில் எடுக்கப்பட்ட காட்சி தான் என அது எடுக்கப்படும் போது பதிவு செய்யப்பட்ட மேக்கிங் வீடியோவை வெளியிட்டது. இந்த நிலையில் குறித்த விளம்பரமும் மேக்கிங்கும் வைரலாக பரவி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
https://canadamirror.com/article/the-woman-who-climbed-to-the-top-of-the-828-meter-1628578219