உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல்: கனடா 8ஆம் இடத்தில்
விசா தடையின்றி பல நாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதி மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டில் குறைந்த தாமதம் ஆகியவற்றில், சில நாடுகளின் கடவுச்சீட்டுகள் (Passport) உலகளவில் அதிக சக்தி பெற்றவையாக உள்ளன.
ஹெலன்லி என்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள Henley Passport Index (கடவுச்சீட்டு குறியீடு) அறிக்கையின் படி, கனடா உலகின் 8ஆம் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக இடம்பிடித்துள்ளது.
இந்த பட்டியலில், கனடா 181 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு விசா இன்றிய அல்லது வருகை விசா அனுமதியுடன் பயணம் செய்யக்கூடியதாக உள்ளது.

இதன் மூலம், கனடா 8ஆம் இடத்தை ஐஸ்லாந்து மற்றும் லிதுவேனியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
கனடிய கடவுச்சீட்டு, உலகளவில் பயண சுதந்திரம், நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றில் தொடர்ந்து வலுவானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தையும், ஜப்பான், தென் கொரியா ஆகியன இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
அறிக்கையின் படி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் கடந்த ஆண்டில் அதிக சரிவை சந்தித்த நாடுகளாக உள்ளன.
அமெரிக்கா தற்போது 10ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 மாதங்களில் 7 நாடுகளுக்கான விசா இல்லா அனுமதியை இழந்துள்ளது.
ஐக்கிய இராச்சியம் 8 நாடுகளுக்கான அனுமதியை இழந்து, வருடாந்த அடிப்படையில் மிகப் பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.