முன்னாள் காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய இளைஞன்!
பெருவில் பொது இடத்தில் முன்னாள் காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய 19 வயதான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெனிசுவேலாவைச் சேர்ந்த 19 வயது செர்ஜியோ தாராச்சே பார்ரா (Sergio Tarache Parra) 18 வயது கேத்ரின் கோமஸைத் (Katherine Gomez) தீ வைத்து எரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தச் சம்பவம் பெரு தலைநகர் லீமாவில் சென்ற மாதம் 18ஆம் இதிகதி இடம்பெற்றுள்ளது. அதற்குச் சில நாள் முன்பு தான் கோமஸ் அவரிடமிருந்து பிரிந்ததாகக் கூறப்பட்டது.
உடலில் 60 விழுக்காட்டுத் தீக் காயங்களுடன் கோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து முன்னாள் காதலனான தாராச்சே கொலம்பியாவில் கைது செய்யப்பட்டார்.