மூன்றாம் உலக யுத்தம் ஏற்படாது; அதிபர் ஜெலன்ஸ்கி!
மூன்றாம் உலக யுத்தம் மூளாது என யுக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் பெவர்லி ஹில்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 80 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழாவில் வீடியோ மூலம் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) உரையாற்றினார்.
1943 ஆம் ஆண்டு, 2 ஆம் உலக யுத்தத்துக்கு மத்தியிலேயே முதலாவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா நடைபெற்றது என்பதை தனது உரையில் ஸெலேன்ஸ்கி சுட்டிக்காட்டினார். அதன்பின் 3 ஆவது உலக யுத்தமொன்று ஏற்படாது என அவர் கூறினார்.
'முதலாவது உலக யுத்தம் மில்லியன் கணக்கான உயிர்களை பலிகொண்டது. 2 ஆவது உலக யுத்தம் கோடிக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. 3 ஆவது உலக உலக யுத்தமொன்று ஏற்படாது. அது ஒரு முத்தொகுப்பு (trilogy) ஆகாது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை யுக்ரைன் தடுத்து நிறுத்தும்' என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறினார். 'யுக்ரைன் யுத்தம் இன்னும் முடிந்துவிடவில்லை.
ஆனால், அலை திரும்புகிறது. நாம் வெற்றி பெறுவோம் என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. மொத்த சுதந்திர உலகத்துடனும் ஒன்றிணைந்து நாம் அதனை சாதிப்போம்.
நாம் வெற்றியீட்டும் நாளில் நிங்கள் அனைவரும் எம்முடன் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்' எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறினார்.