பிரான்சில் பல்பொருள் அங்காடி கூரையில் பதுங்கியிருந்த திருடன்
திருடன் ஒருவன் பல்பொருள் அங்காடியின் கூரைக்குள் மணிக்கணக்கில் பதுங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Cogolin (Var) இல் உள்ள E.Leclerc பல்பொருள் அங்காடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கடைக்குள் புகுந்த திருடன், கடையின் கழிவறைக்கு சென்று, அதன் கூரையின் உள்ளே சென்றான்.
அவர் அமைதியாக நீண்ட நேரம் அங்காடியை மூடும் வரை காத்திருந்தார். அப்போது கடையை மூடிவிட்டு விளக்கு அணைந்ததும் திருடன் கூரையில் இறங்கி கழிவறைக்குள் இருந்து வெளியே வந்தான். மேலும் அங்காடியின் எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்ற அவர், அங்கிருந்த பொருட்களை திருடி விட்டு செல்ல முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக கடையின் காவலாளி இருப்பது திருடனுக்குத் தெரியவில்லை.
காவலர் திருடனைப் பார்த்து, அவரைக் கடைக்கு வெளியே பூட்டிவிட்டு ஜோந்தமினரை அழைத்தார்.
ஜோந்தமினர்கள் விரைந்து வந்து திருடனை கையால் பிடித்தனர்.