ஏஐ மீதான நம்பிக்கையால் பணி நீக்கம்; எதிர்காலத்தில் ஆபத்து; அமேசான் CEO எச்சரிக்கை!
தற்போது ஏஐ மீதான நம்பிக்கையால் பணியாட்களை வேலையை விட்டு நீக்கும் நிறுவனங்கள் பின்னாட்களில் வருந்த வேண்டியிருக்கும் என அமேசான் CEO Andy Jassy எச்சரித்துள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் பல துறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக ஐடி துறையில் ஏஐ வரவுக்கு பிறகு பணியிழப்பு அதிகரித்துள்ளது.
மனித மூளையை செயற்கை நுண்ணறிவால் எட்ட முடியாது
பிரபலமான கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களே ஏஐ ஆட்டோமேஷன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இதன் எதிர்கால ஆபத்து குறித்து அமேசான் CEO தெரிவித்துள்ளார்.
இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் முதலாளிகளின் முடிவு முட்டாள்தனமானது.
இன்று இந்த முடிவு அவர்களுக்கு புத்திசாலித்தனமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்காலத்தில் உங்கள் நிறுவனங்களில் அனுபவம் வாய்ந்த நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
முடிவெடுக்கும் திறனில் மனித மூளையை செயற்கை நுண்ணறிவால் எட்ட முடியாது என அமேசான் CEO கூறியுள்ளார்.