வீட்டிற்குள் 13 வயது சிறுமியை கட்டிவைத்துவிட்டு திருடர்கள் அரங்கேறிய சம்பவம்!
பாரிஸில் 13 வயதுடைய சிறுமியை வீட்டில் கட்டிவைத்துவிட்டு பாரியளவிலான பணத்தை கொள்ளையிட்டு ஒரு திருடர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பாரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16-09-2024) பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
13 வயதுடைய சிறுமியொருவர் வீட்டில் தனியாக இருந்த வேளையில் வீட்டுக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், அச்சிறுமியை கத்தியின் மூலம் மிரட்டி, அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் கத்தி ஒன்றின் மூலம் அவரைக் கட்டிவைத்து விட்டு வீட்டில்லிருந்த பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது 15,000 யூரோக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தப்பியோடிய கொள்ளையர்கள் பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.