உலகில் இன்ப அதிர்ச்சி அளிக்கும் இடமாக காட்சியளிக்கும் தமிழர் பகுதியான இயக்கச்சி (Photos)
"ReeCha" ஒரு இன்ப அதிர்ச்சியளிக்கும் இடம். முழுமையாக சுத்திப்பார்க்க முழு நாள் தேவையான இடம். சும்மா போய் பாத்திற்று வருவோம் என்ற எண்ணத்தில் போனதால் முழுமையாக பார்க்க முடியாது.
ஏனென்றால் ReeCha Farm அனைத்தையும் தாண்டிய ஒரு இடமாக கவர்ந்து இருக்கிறது. இலங்கையில், இயக்கச்சி A9 சந்தியில் இருந்து கூப்பிடு தொலைவில் கிட்டத்தட்ட 200 ஏக்கர் காணியில், இது வரைக்கும் 230 கோடி ரூபாய் செலவில் ( இன்னமும் 300 கோடி செலவுக்கான வரைத்திட்டத்துடன்) அமைக்கப்பட உள்ளதாக வந்த தகவலின் ஆச்சரியம்.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், Resort style லில் நீச்சல் தடாகத்தை சுற்றி 10 சிறுகுடில்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுகள், சொகுசு தங்கு விடுதி, குளமும் குளத்தை சுற்றி இறைச்சி வகைகளை சுட்டு சாப்பிடும் சாதனங்களும், முழுமையாக அனுபவிக்ககூடிய Atmosphere ம், 100 ற்கும் மேற்பட்ட கோழி வகைகளுடனான கோழிப் பண்ணை, பன்றிகள் பண்ணை, அன்னாசித்தோட்டம், தென்னந்தோப்பு ( 5000 ற்கும் மேற்பட்ட தென்னைகள்), Pub மற்றும் களியாட்டம் செய்வதற்கான பகுதி, இலங்கையில் உள்ள மிகமுக்கியமான இடங்களைக் கொண்ட மாதிரி வடிவம், பல்சுவை உணவு விடுதி என வெளிநாட்டு உள்நாட்டு கலப்புடனான ஒரு விடுமுறையை கழிக்கும் இடமாக அமைந்துள்ளது.
இது இந்த திட்டத்தின் அரைவாசியே. இன்னமும் மூன்று வருடங்களுக்குள் இன்னும் பல இன்ப அதிர்ச்சிகளுடன் பிரமாண்டமாய் உலகத்தரத்தில் இந்த Farm பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும்.
குறிப்பாக, ஊருக்கு போனால் கோயில்,குளம்,நாலு உறவுகள் வீடு என பயணத்தை முடித்துச் செல்லும் வெளிநாட்டவருக்கும், எங்கடா போறது, என்னத்த செய்யுறது என புலம்பும் உள்நாட்டவர்களுக்கும் ReeCha Farm ஒரு வரப்பிரசாதம் என Nathan Kathirgamanathan தனது முகநுால் பதிவில் பதிவிட்டுள்ளார்.














