இவரா பிரித்தானியாவின் புதிய பிரதமர்! மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய டிவிட்டர் பதிவு
பிரித்தானியாவின் பிரதமர் போட்டியில் 80,000 வாக்குகள் பெற்று ரிஷி சுனக்கை தோற்கடித்த டிரஸ், பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமர் ஆனார்.
ட்விட்டரில் Liz Trussel என்ற பெண் ஒருவரை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் என்று மக்கள் தவறாகக் கருதிய நிலையில் அப்பெண்ணின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அந்தவகையில் ஸ்வீடனின் பிரதம மந்திரி மாக்டலினா ஆண்டர்சன் (Magdalena Andersson ) ட்வீட் தவறாக டேக் செய்யப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் (Magdalena Andersson ) திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரேட் பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்கும் @liztruss-க்கு வாழ்த்துக்கள். ஸ்வீடன் மற்றும் கிரேட் பிரிட்டன் எங்கள் ஆழ்ந்த மற்றும் விரிவான ஒத்துழைப்பை தொடரும். இது எங்கள் குடிமக்கள், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமானது என பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டார்.
ஆனால், அவர் (Magdalena Andersson ) 2009-ல் இருந்து Liz Trussel-க்கு சொந்தமான @liztruss ஐடியை தெரியாமல் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் Trussel-க்கு சில மாதங்களுக்குப் பிறகு ட்விட்டரில் இணைந்த Truss, @trussliz என்ற ட்விட்டர் ஐடியை எடுக்க வேண்டியிருந்தது.
அதேசமயம் ஸ்வீடன் பிரதமர் ஆண்டர்சனின் (Magdalena Andersson ) வாழ்த்துக்கு Trussel என்ற அந்த பெண் பதிலளித்துள்ளார். அதில், விரைவில் சிந்திப்போம், விருந்துக்கு தயார்செய்யுங்கள் என்பது போல் எழுதியுள்ளார்.
இது குறித்து தெரியவந்ததும் ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் (Magdalena Andersson ) தனது வாழ்த்து செய்தியை மீண்டும் சரியான ஐடியுடன் பதிவிட்டார். அதேவேளை இதேபோன்ற தவறை பிரித்தானியாவின் பசுமை கட்சி எம்பி கரோலின் லூகாஸும் செய்துள்ளார். எனினும் அவர் பின்னர் மன்னிப்பு கேட்டார்.
