கனடாவின் இந்தப்ப குதியில் லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள்
கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொழில் துறை திட்டங்களில் ஒன்றாக, ஜெர்மனியின் 'டிகேஎம்எஸ்' நிறுவனத்துடன் புதிய நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனேடிய அரசு தயாராகி வருகிறது.
இதன் மூலம் கனடாவின் அட்லாண்டிக் பிராந்தியத்தில், குறிப்பாக நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
இராணுவத்தின் இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1,00,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஹாலிஃபாக்ஸ் மற்றும் அட்லாண்டிக் கனடா முழுவதும் அடுத்த சில தசாப்தங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார மற்றும் தொழில் துறை நடவடிக்கைகள் மிக தீவிரமாக இருக்கும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
முதல் நான்கு நீர்மூழ்கி கப்பல்களும் வரும் 2034ஆம் ஆண்டிற்குள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஜெர்மன் நிறுவனத்துடன் 'குளூஸ்கேப்' (Glooscap) பூர்வகுடி மக்கள் கூட்டாண்மை வைத்துள்ளனர்.
பூர்வகுடி மக்களின் வணிகங்களை வலுப்படுத்தவும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கனேடிய நீர்மூழ்கி கப்பல் படையை நீண்ட காலத்திற்குப் பராமரிக்கக் கூடிய திறமையான பூர்வகுடி தொழிலாளர்களை உருவாக்கவும் இது உதவும் என அதன் தலைவர் சிட்னி பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.