அச்சுறுத்தும் ரக்ஷ்யா; உக்ரைனிற்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பிய பிரிட்டன்!
உக்ரைனுடனான தனது எல்லையில் ரக்ஷ்யா ஒருஇலட்சத்திற்கும் அதிகமான துருப்பினரை குவித்துள்ளது. இதை அடுத்து உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக குறுகிய தூர டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உக்ரைனிற்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக சிறிய எண்ணிக்கையிலான படையினரை அந் நாட்டிற்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டிஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ரக்ஷ்ய துருப்பினர் உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற நியாயபூர்வமான உண்மையான காரணங்களுடன் கூடிய கரிசனைகள் காணப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி திங்கட்கிழமை முதல் தொகுதி ஆயுதங்கள் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் அது குறித்து மேலதிக விபரங்களை அமைச்சர் வெளியிட மறுத்துள்ளார்.
தனது எல்லைகளை பாதுகாப்பதற்கு உக்ரைனிற்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாவும், புதிய உதவிகள் உக்ரைனின் தனது எல்லைகளை பாதுகாப்பதற்கான திறமையை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாங்கள் வழங்கியுள்ள ஆயுதங்கள் தற்பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுபவையே என்றும், மூலோபாய ரீதியில் முக்கியமானவை அல்ல- ரஸ்யாவிற்கு எதிரானது இல்லை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரக்ஷ்யா தாக்குதலில் ஈடுபட்டால் அதனால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.