ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்து; எச்சரிக்கும் எலான் மஸ்க்!
இன்னும் ஒரே ஆண்டில் மனிதர்களை மிஞ்சும் அறிவாற்றலை ஏஐ பெற்று விடும் என்றும் மனிதர்களை தூக்கி சாப்பிட்டு விடும் என்றும் எலான் மஸ்க் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உலகில் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைந்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது.
அதுமட்டுமல்லாது 10 அல்லது 20 ஊழியர்கள் ஓரு நாள் முழுவதும் செய்யும் ஏஐ தொழில்நுட்பம் ஒரு சில நிமிடங்களில் செய்து கொடுத்துவிடுகிறது என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியை முடிக்கவே விரும்புகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்த ரோபோவும் வந்துவிட்டதால் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உலகம் முழுவதும் மிக தீவிரமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டில் சாதாரண நபர்களை ஏஐ மிஞ்சிவிடும் என்றும் உலகில் இருக்கும் அனைத்து நபர்களையும் மிஞ்சும் அளவுக்கு 2029 ஆம் ஆண்டுக்குள் ஏஐ எட்டிவிடும் என்றும் நம்மிடம் இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் அந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்