தென்கொரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மூன்று பேர் பலி
தென்கொரியாவில் மூன்றாவது நாளாக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மழை வெள்ளத்தினால் 5,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அத்துடன் பொருட் சேதம், உட்கட்டமைப்பு சேதம் என்பன இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாங்ஜூ நகரம் உள்ளிட்ட சில தென்பகுதி இடங்களில், 400 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பெய்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்தோரில் இருவர், வெள்ளம் தேங்கியிருந்த வீதிகளில் நின்ற கார்களிலும் ஒருவர் வெள்ள நீர் நிரம்பிய கட்டிடத் தரைத்தளத்திலும் சிக்கிக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
தென்கொரிய ஜனாதிபதி லீ ஜேய் மியூங், இயற்கைப் பேரிடரைத் தடுப்பது சவாலாக இருந்தாலும் பாதிப்பை முன்பே உணர்ந்து பொதுமக்களை எச்சரிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.