அமெரிக்கா விமான விபத்தில் சிக்கி மூவர் பலி!
அமெரிக்கா - ஓரிகான் பகுதியில் ஒற்றை இயந்திரம் கொண்ட சிறிய விமானம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்று மாலை 5 மணியளவில், மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது.
இதன் போது 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது.
அந்த பகுதியில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் செல்கின்றன.
அந்த மின் இணைப்பை, மின்சார நிறுவனம் நிறுத்த வேண்டியுள்ளது. அதன்பின்னரே, விபத்து நடந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்க முடியும் மற்றும் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ய முடியும் என போலீசார் கூறுகின்றனர்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெளிவாக தெரியவில்லை.
இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.