ஒன்ராறியோ தீ விபத்தில் மூவர் பலி!
ஒன்ராறியோ, பர்லிங்டன் பகுதியில் வார இறுதியில் இடம்பெற்ற கோரமான தீ விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேப்பிள் கிராசிங் சவுக் பகுதியில் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களில், ஒரு வயதுக் குழந்தை, 12 வயதுச் சிறுவன் மற்றும் வயது வந்த ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஒன்ராறியோ தீயணைப்பு மார்ஷல் ஜோன் பெக் திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார்.
தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 1 வயது மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் ஆபத்தான காயங்களுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தீயணைப்பு மார்ஷல் ஜோன் பெக், தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்ற மேற்கொண்ட துணிச்சலான முயற்சிகளைப் பாராட்டினார்.
"தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த நரகத்திற்குள்தான் ஓடிச் சென்றார்கள்" என்று அவர் அவர்களின் அர்ப்பணிப்பைப் புகழ்ந்துள்ளார்.