சஸ்கட்ச்வானில் பெரும் சோகம்; நீரில் மூழ்கிய வாகனத்தில் 3 சடலங்கள் மீட்பு
கனடாவின் சஸ்கட்ச்வானில் நீரில் மூழ்கிய நிலையில் வாகனமொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சஸ்கட்ச்வானின் 155ம் இலக்க அதிவுக நெடுஞ்சாலையில் பியாவெர் பாலத்தினை அண்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சஸ்கட்ச்வானின் கிறீன் குளத்திலிருந்து இந்த வாகனம் மூழ்கியிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பம் எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தசம்பவத்தில் 25 வயதான அலிஷா ட்ரோச்சர், 25 வயதான மோர்கன் போயர் மற்றும் 31 வயதான கொன்ராட் மெக்டொனால்ட் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கியிருந்த வாகனத்திலிருந்து இந்த மூன்று பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் பல்வேறு விசாரணைப் பிரிவுகள் சம்பவ அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.