லொட்டரியில் மில்லியன் டொலர்கள் பரிசை வென்ற மூவர்: உரிமை கோராததால் குழப்பம்
பிரிட்டனில் யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் பரிசை வென்ற மூவர் இன்னமும் உரிமை கோராமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த குலுக்கலில் 20 பேர்களுக்கு தலா 1,000,000 பவுண்டுகள் அதாவது 1,169,800 டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மூவர் இதுவரை தங்கள் பரிசை உரிமை கோரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் யூரோமில்லியன்ஸ் வெற்றியாளர்கள் உடனடியாக தங்கள் தேசிய லொட்டரி கணக்கை சரிபார்க்க வேண்டும் எனவும், வெற்றியாளர்கள் உதவி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தங்கள் பரிசுக்கு உரிமை கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக யூரோமில்லியன்ஸ் வெற்றியாளர்களில் சிலர் இதுபோன்று மாதக்கணக்கில் உரிமை கோராமல் இருப்பதுண்டு என தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 22 பேர் வெற்றி பெற்றதில் ஒருவர் மட்டும் கடந்த வாரம் தமது பரிசை உரிமை கோரியுள்ளார்.
தற்போது இந்த உரிமை கோராத மூவர் அடுத்த இரண்டு வாரத்தில் தங்கள் பரிசை உரிமை கோரவில்லை என்றால், அவர்கள் டிக்கெட் வாங்கிய பகுதியை வெளியிட இருப்பதாக யூரோமில்லியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், 180 நாட்களுக்கும் யூரோமில்லியன்ஸ் வெற்றியாளர்கள் தங்கள் பரிசை உரிமை கோர வேண்டும் என்பது விதியாகும்.