அமெரிக்க இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லாஸ் குரூஸ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக லாஸ் குரூஸ் பொலிஸ் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இரண்டு பேரும் 16 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக லாஸ் க்ரூசஸ் பொலிஸார் முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளனர்.
அனுமதியற்ற கார் கண்காட்சியில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த மோதலிலே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் பொலிஸார் பல தடயங்களை தீவிரமாகப் பின்தொடர்ந்து வருகின்றனர் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் தற்போதைய நிலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.