டயர் நிக்கோல்ஸ் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் விடுதலை
அமெரிக்காவில் கருப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மெம்பிஸ் நகரில் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய டயர் நிக்கோல்ஸை பொலிஸார் அடித்து துன்புறத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவதத்தில் படுகாயமடைந்த டயர் நிக்கோல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாகவே அவர் உயிர் இழந்துள்ளார் என அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நாடு தழுவிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் கருப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் மூவரை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.