கடலை நோக்கி ஓடும் குட்டி டைனோசார்கள்; வைரலான காணொளி!
பீச் ஒன்றில் கடலை நோக்கி குட்டி டைனோசார்கள் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜுராசிக் பார்க் என்ற ஆங்கில திரைப்படத்தில் வரும் டைனோசார்களை நாம் பார்த்திருப்போம். மிரட்டும் வகையிலான பெரிய உருவம் கொண்ட அவை, பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளன.
காலப்போக்கில் அந்த உயிரினங்கள் அழிந்து விட்டன. எனினும், அவற்றின் படிமங்கள் கிடைத்து வருவது இந்த பூமியில் அவை வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன.
இந்நிலையில், குட்டி டைனோசார்கள் கடலை நோக்கி ஓட கூடிய அரிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பியூடென்கெபிடென் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதற்காக எனக்கு ஒரு சில வினாடிகள் எடுத்து கொள்ளப்பட்டது என தலைப்பிட்டு அவர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அதில், நீண்ட கழுத்துடன் சாரோபோட்ஸ் வகையை சேர்ந்த இளம் டைனோசார்கள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்கள் கடலை நோக்கி ஓடுகின்றன. 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பயனாளர்கள் பலர் குழம்பி போயுள்ளனர்.
அவர்களில் ஒருவர், அது நன்றாக உள்ளது. எனக்கும் சில வினாடிகள் எடுத்து கொண்டது என தெரிவித்து உள்ளார். எனினும், ஒரு சிலர் அதனை அடையாளம் கண்டுள்ளனர்.
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
அது டைனோசார்களின் கூட்டம் அல்ல. கோவாடிஸ் அல்லது கோவாடிமுண்டிஸ் என அழைக்கப்படும் உயிரினம் அது.
புரோசயோனிடே குடும்பத்தில் இருந்து வருவது. பகல் பொழுதில் இவை சுறுசுறுப்புடன் செயல்படும். தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ அமெரிக்கா, தென்மேற்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் பாலூட்டி இனங்கள் ஆகும் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இந்த வகை இனங்களில், பெரிய கோவாடிஸ் ஆனது தலை முதல் வால் முனை வரையில் 33 முதல் 69 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு பெரிய, வீட்டு பூனை அளவில் அவை இருக்கும்.
30 செ.மீ. உயரத்துடன், 2 முதல் 8 கிலோ எடை கொண்டிருக்கும்.
கரடிகள் அல்லது ரக்கூன்களை போன்று கால் பாதங்களை கொண்டிருக்கும் இந்த கோவாடிஸ், மனிதர்களை போன்று கால்கள் முழுவதும் தரையில் படும்படி நடந்து செல்பவை ஆகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022