சரியத் தொடங்கும் கொரோனா பாதிப்பு! குறைவடையும் பெண்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று மேலும் 1,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று வியாக்கிழமை (17-02-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை தமிழக சுகாதாரத்துறை வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் மேலும் 1,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,41,783 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். இதேபோல் சிகிச்சையில் இருக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கையும் நேற்றை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,768 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 33,80,049 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,962 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா காரனமாக தனியார் வைத்தியசாலையில் 3 பேரும், அரசு வைத்தியசாலைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகரமான சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,48,086 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக கோவையில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 6,24,81,927 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 82,272 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23,772 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 20,08,837 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 740 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களில் இதுவரை மொத்தம் 14,32,908 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 512 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.