டொங்கா சுனாமி சேதவிபரங்கள்; ஆராயும் நியூஸிலாந்து
டொங்காவின் (Tonga )ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமியின் சேதவிபரங்களை ஆராய றித்த பகுதிக்கு நியூஸிலாந்து கு விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில், இதுவரை துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாவில்லை. இந்த நிலையில், அதனை ஆராய விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், டொங்காவில் (Tonga)சுனாமி காரணமாக 80 ஆயிரம் பேர் வரையில், பாதிக்கப்பட்டிருக்ககூடும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
டொங்காவின் (Tonga) ஆழ்கடலில் நேற்றைய தினம் பாரிய எரிமலை வெடிப்பு இடம்பெற்ற நிலையில் , ஆழிப்பேரலையும் ஏற்பட்டிருந்தது.
இதனால் பசுவிக் தீவுகள் புகையினால் மூடப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.