கனடாவின் எட்மோன்டனில் சூறாவளி எச்சரிக்கை
அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள யெல்லோஹெட் கவுண்டியின் சில பகுதிகளுக்குக் கனடா சுற்றுச்சூழல் துறை சிவப்பு நிறக் கடுமையான சூறாவளி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எட்சன், பியர்ஸ் மற்றும் சன்டான்ஸ் மாகாணப் பூங்கா ஆகிய பகுதிகள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மாலை 5:35 மணி நிலவரப்படி எட்சன் நகருக்கு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஒரு கடுமையான இடியுடன் கூடிய புயல், மணிக்கு 45 கி.மீ வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இது சூறாவளியை உருவாக்கும் அபாயம் கொண்டதாகக் கூறப்படுகிறது. புயல் நகரும் பாதையில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆகிய பகுதிகள் தீவிர இடியுடன் கூடிய புயலுக்கான ஆரஞ்சுக் கண்காணிப்புப் பகுதி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
இடியுடன் கூடிய பலத்த மழை, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், சில இடங்களில் சூறாவளி உருவாகும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய புயல் சூறாவளியை உருவாக்கும் சூழலிலோ அல்லது ஏற்கனவே சூறாவளியை உருவாக்கியிருந்தாலோ இத்தகைய கடுமையான 'சூறாளி எச்சரிக்கைகள்' விடுக்கப்படுகின்றன.
மேலும் கூடுதல் விவரங்களைச் சுற்றுச்சூழல் கனடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.