ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கன்னிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அங்கீகரித்த நீர்வழிப்பாதையை பின்பற்றாமையே இதற்கு காரணமாகும் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இன்றி பயணித்த போதே குறித்த எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஈரான் அறிவித்த பாதையிலிருந்து கப்பல்கள் விலகிச் சென்றால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இஸ்லாமிய குடியரசான ஈரான் இதற்கு முன்னரும் பலமுறை எச்சரித்திருந்தது.
இதற்கு முன்னர், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) சில கப்பல்களைத் தடுத்து நிறுத்தியபோது அல்லது தாக்கியபோது, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் ஈரானிய அதிகாரிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அத்துடன் ஈரானிய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட பாதைகள் வழியே அவை செல்ல வேண்டும் என்றும் அறிக்கைகள் வௌியிடப்பட்டிருந்தன.
அவ்வாறு விலகிச் சென்ற கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்தே மீண்டும் அமெரிக்க - ஈரான் போர் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் 13 நாட்கள் தொடர்ந்தும் நீடித்த இந்த போரானது வார இறுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.