றொரன்டோவில் நடாத்தப்படவிருந்த விமான சாகச நிகழ்வு ரத்து
றொரன்டோவில் நேற்றைய தினம் நடாத்தப்படவிருந்த விமான சாகச நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விமான சாகச நிகழ்வினை ரத்து செய்ய நேரிட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவும் காலநிலை காரணிகளினால் நிகழ்வினை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.
விமானிகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பனி மூட்டத்துடனான வானிலை நிலவியதாகவும் இது விமான சாகச நிகழ்வுகளை நடாத்த உசிதமானதல்ல எனவும் விமானியொருவர் தெரிவித்துள்ளார்.
விமான சாகச நிகழ்வு ரத்து செய்யப்பட்ட காரணத்தினால், டிக்கட் கொள்வனவு செய்யப்பட்டவர்களுக்கு பணம் மீள செலுத்தப்பட்டதா என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
றொரன்டோ விமான சாகச நிகழ்வு பிரபல்யமானது என்பதுடன் இதனை கண்டு களிப்பதற்கு பலர் வருடாந்தம் ஒன்றுகூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.