டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு
கனடாவின் டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேக பகுதிகளில் குறிப்பாக டொரன்டோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் 25 சென்டிமீட்டருக்கு மேல் பனிப்பொழிவு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் டொரன்டோவில் பதிவான அதிகூடிய பனிப்பொழிவு தற்போது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனேகமான பகுதிகளின் பாடசாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைவேளை, சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.