பாகிஸ்தானில் ஏற்பட்ட குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ; 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
பலுசிஸ்தான் அரசு செய்தி தொடர்பானர் ஷாஹித் ரிண்ட் "இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க விசாரணையில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு (IED), லாரி சென்றபோது வெடிக்க வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இதுபோன்ற கடந்த கால தாக்குதலுக்கு சட்டவிரோத பலுச் விடுதலைப்படை மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தடைசெய்யப்பட்ட குழுக்கள் பாதுகாப்புப்படைகள், பாதுகாப்பு கட்டமைப்புகள், மக்கள் மற்றும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.