யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ரொறன்டோ நிபுணர்!
யாழ்.மாநகர சபை திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் வினைத்தறனாக செயற்படுவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக கனடா - ரொறன்டோ மாநகரின் துறைசார் நிபுணர் ஒருவரை யாழ்.மாநகரசபைக்கு அனுப்ப ரொறன்டோ மாநகர முதல்வர் ஜோன்ரொரி (John Tory) உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் (John Tory) வி.மணிவண்ணனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ரோறோன்டோவில் நடைபெற்றது.
இதன்போது யாழ்.மாநகர முதல்வர் மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ரொறோன்டோ மாநகர முதல்வருக்கு தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் ரொறோன்டோ மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் முகாமைத்துவ நிபுணர் ஒருவரினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அவர் மூலம் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் தொடர்பான பயிற்சிகளையும் அனுபவ பகீர்வுகளையும் வழங்குவதற்கான இணக்கப்பாட்டினை ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரி (John Tory) வழங்கினார்.
இததற்கான நன்றி தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர், ஓக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ரொறோன்டோ மாநகர முதல்வர் தேர்தலில் மீண்டும் ஜோன் ரொறி வெற்றி பெறவேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வீ. மணிவண்ணன் கைது செய்யப்பட்டபோது ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரி (John Tory) அதற்கு கண்டனம் தொவித்ததுடன் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் .
மேலும் ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரியுடனான (John Tory) சந்திப்பில் ரொறோன்டோ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மக்கல்வியும் (Jennifer McKelvie)கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.