டொராண்டோவில் கடும் பனிப்பொழிவு பாடசாலைகள் மூடல்
கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப் பொழிவு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பொழிவு காரணமாக பாதைகள் பனி படர்ந்த நிலையில் பல வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. குறித்த பகுதியின் அனேகமான பாடசாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் விபத்துக்கள் காரணமாக பல பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பனிப் புயல் காரணமாக 20 முதல் 35 செ.மீ. வரை பனிப்பொழிவு பதிவாகும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கனமழை மற்றும் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு காரணமாக பார்வைத் தூரம் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் டொராண்டோ பகுதியின் பெரும்பாலான பகுதிகளுக்கு, குறிப்பாக யோர்க், டர்ஹாம் மற்றும் பீல் பகுதிகளில், ஆரஞ்சு நிற பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வகை எச்சரிக்கை அரிதானது என்றும், “கணிசமான சேதமும், இயல்பு வாழ்க்கை பாதிப்பும் ஏற்படக்கூடிய கடுமையான வானிலை” என்பதை குறிக்கிறது என்றும் கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.