டொரொண்டோவில் அறிமுகமாகும் புதிய தொலைபேசி பகுதி குறியீட்டு எண்
டொரொண்டோவில் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்யும் நபர்கள், இந்த சனிக்கிழமை முதல் “942” எனும் புதிய பகுதி குறியீட்டை (Area Code) பெற வாய்ப்பு உள்ளது.
இது, ஏற்கனவே உள்ள 416, 647 மற்றும் 437 எனும் பகுதி குறியீடுகளுடன் இணைந்ததாகும்.
தற்போது உள்ள எண்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய பகுதி குறியீடுகள் அமுலில் இருக்கும் என தொலைத்தொடர்பு கூட்டமைப்பு (Telecommunications Alliance) தெரிவித்துள்ளது.
கனடாவின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் (CRTC) இந்த 942 குறியீட்டை ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரித்தது.
இது, டொரொண்டோவில் தொலைபேசி எண்ணுக்கான தேவை அதிகரித்து வருவதால், 2026 ஏப்ரலுக்குள் முந்தைய குறியீடுகள் அனைத்தும் நிறைவடையும் என கணிக்கப்படுவதால், அவசியமான மாற்றமாக கருதப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த தேவையான தரவுத்தள மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் – சேவை வழங்குநர்களுக்கான ஏற்பாடுகளுக்காக 2 ஆண்டுகள் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முந்தைய முறையில், 2013 ஆம் ஆண்டு 437 குறியீடு அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன், 2001 இல் 647 குறியீடு பயன்படுத்தப்பட்டதாகும்.